2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஆபத்தில்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக பாராளுமன்றத்தில் முன்கூட்டியே கூறியிருந்தோம் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்து அமைச்சின் ஊடாக தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

இன்று (3) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

மண்சரிவு அபாய வலயத்தில் வாழாத காளியம்மா இன்று உயிரிழந்ததைப் போன்று, நாளை மண்சரிவு அ​பாயத்தில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் காணி அமைச்சர் ஹரீனுடனும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்கொண்டு பேசியதாகத் தெரிவித்த அவர் இதற்கு உடனடியாக தீர்வை எடுக்க வேண்டும் என்றும் ஏனெனில் நாட்கள் செல்ல செல்ல இதன் ஆபத்து அதிகம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X