Freelancer / 2022 மார்ச் 01 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
திம்புல்ல - பத்தனை, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் உள்ள மேச்சல் நிலப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியில் அமைந்துள்ள கால்நடைகளை மேச்சல் செய்வதற்கும் அவற்றிக்கு தேவையான புற்களை குறித்த பகுதியிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 4.00 மணியளவில் திடீரென மேச்சல் நிலப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் புற் தரைகள் தீக்கிரையாகியுள்ளன.
எனவே எதிர்காலத்தில் கால் நடைகளுக்கு போதியளவு உணவு தேவையினை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதனால் தீ மிக வேகமாக பரவி வருவதுடன் தீயினை கட்டுப்படுத்துவதற்கும் முடியாதுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பல புற்தரைகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனால் கால்நடைகளுக்கு தேவையான புற்களை தூர பிரதேசங்களுக்கு சென்று சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. (R)
5 minute ago
14 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
20 minute ago
26 minute ago