2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மொட்டு உறுப்பினரின் வீட்டின் மீது கல்வீச்சு

R.Maheshwary   / 2022 மே 01 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

குண்டசாலை பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலால் குறித்த வீடு சேதமடைந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் குண்டசாலை பிரதேச சபையின் தவிசாளரான ரஜர அக்மீமன என்பவரின் தெல்தெனிய- கோனவல பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தவிசாளர், பிரதமரால் பிரதேசசபையின் தவிசாளர்கள் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் இதில் கலந்துகொண்டு தான் கருத்துகளை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (29) கோனவல சந்தியில் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது இரவு 7.30 மணியளவில் சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X