R.Maheshwary / 2022 மே 18 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நாவலப்பிட்டி நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மேலும் 10 பேர் நேற்று (17) கைதுசெய்யப்பட்டனர்.
நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்கேதநபர்கள் 10 பேரும் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை தலா ஓர் இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் இது தொடர்பான வழக்கை அடுத்த மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாகவும் நீதவான் நிலந்த விமலவீர உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த சந்தேகநபர்கள் சார்பில் 8 சட்டத்தரணிகள் சுயாதீனமாக ஆஜராகி சந்தேகநபர்கள் சார்பில் காரணங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago