R.Maheshwary / 2022 மே 19 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார
தம்புள்ளை நகரத்தில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, நசுங்கி சேதமடைந்துள்ளது.
கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோவொன்று பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
நகரை அழகுப்படுத்துவதற்காக, சில வருடங்களுக்கு முன்னர் வீதியின் இரு மருங்கிலும் தம்புள்ளை நகர சபையால் மரங்கள் நடப்பட்டதுடன், மரத்தின் வேர்களால் நடைபாதைகளில் உள்ள கொன்கிறீட்கள் வெடித்து, பாதசாரிகள் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago