2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மௌன பிரார்த்தனையும் பஜன் நிகழ்வும்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணல் மகாத்மா காந்தியின் 148ஆவது பிறந்த தினத்தையொட்டி, மௌன பிரார்த்தனை நிகழ்வு, கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தில், இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மலையக பெருந்தோட்ட மக்களுக்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமனிடம், சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து கையளித்தார்.

அத்துடன், தனது பதவிக்காலம் முடிவடைந்து புதுடில்லிக்கு செல்லவிருக்கும் கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமனின் சேவைகளை பாராட்டும் முகமாக, அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில, டொக்டர் அஜே ஜயசீலனும் கலந்துகொண்டார். தெஹியோவிட்டவில் கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவால் பெற்றோரை இழந்த நான்கு பிள்ளைகளின் கல்விக்காக, கடந்த ஒருவருடமாக உதவிவரும் டொக்டர் அஜே ஜயசீலன் தொடர்ந்தும் உதவுவதற்கு இணக்கம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .