Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக், இக்பால் அலி
'உலகக் கல்வியுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்லாமிய ஆன்மீக மார்க்கக் கல்வியையும் கட்டாயம் ஒவ்வொரு மாணவனும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒழுக்க மாண்புகள் பேணப்படும். இம்மைக்கும் மறுமைக்குமான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளமுடியும்'; என தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர்அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் தெரிவித்தார்.
அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா திங்கட்கிழமை (30) பாடசாலையின் கேட்பார் கூடத்தில் அதிபர் எம். எஸ். எம். இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில்,
'இப்பாடசாலை சிறந்த கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது. இத்தகைய உயர் சிறப்புமிக்க புகழை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும். இதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கூறுக் கொள்ளவிரும்புகின்றேன்.
இங்குள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு பெற்றோர்; முக்கிய பங்களிப்புச் செய்ய வேண்டும். எந்தப் பாடசாலையாக இருந்தாலும் சரி பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே அப்பாடசாலைகள் மேலும் வளர்ச்சியையும் அபிவிருத்திiயும் நோக்கி செல்லும். எனவே, எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு பெற்றோர், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானதாகும்.
இன்று உலகம் மிக வேகமாக வளர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். இதற்கேற்ப தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகின்றது. விசேடமாக கற்றல் கற்பித்தல் என்ற செயற்பாடுகள் அதற்கு ஏற்ப சீராக அமைய வேண்டுமே அன்றி இது வேறுபட்ட வகையில் அமையக் கூடாது என நான் விசேடமாக வேண்டிக் கொள்கின்றேன். இந்த தொழில்நுட்ப விடயத்தில் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் உள்ளன. அவற்றை நன்கு அறிந்து இந்த மாணவர்கள் செயற்படுதல் வேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago