Niroshini / 2016 மே 31 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
மலையகத்தில் இடி - மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் உள்ள பல வீடுகளின் மீது இடி - மின்னல் தாக்கியதன் காரணமாக அவ்வீட்டிலிருந்த மின்பாவனைப் பொருட்கள் பல சேதமாகியுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளவர்கள் வேலை செய்துக்கொண்டிருந்த வேளையில் இவ்வீடுகளின் மீது இடி மின்னல் தாக்கியதாகவும் இதன்போது வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
57 minute ago