2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மீரியபெத்த மக்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

வெதமுல்ல, லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு ஒருமாதம் கடந்து விட்டது. இந்த ஒருமாத காலப்பகுதியில் இம்மக்களின் முக்கிய தேவைகள் ஓரளவேனும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்காலிக குடியிருப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் நிரந்தர வீடுகளை அமைப்பதற்காக, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மீரியபெத்த மண்சரிவில் உடமைகளை இழந்த உறவுகளுக்கும் தற்காலிக குடியிருப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள், முகாம்களில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.  

இம்மக்களின் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .