2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மீரியபெத்த மண் விழுங்கியவற்றில் உடமைகள் தென்படுகின்றன

Sudharshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரட்ணம் கோகுலன்

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது. இந்நிலையில், மண்சரிவில் புதையுண்டு போன தமது உடமைகள் தற்போது வெளியே தென்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையை தொடர்ந்து இப்பகுதியில் மண் கழுவி செல்லப்படுகின்றது. இதனால், மண்சரிவின்போது மண்ணுள் புதையுண்ட பொருட்கள் தற்போது தென்படுகின்றன.

உடைகள், புத்தகப்பை, வீட்டுப் பாவனைப் பொருட்கள் உள்ளிட்டபொருட்களே இவ்வாறு  தென்பட்டுள்ளன.

கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில்  கடந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததுடன் நிர்க்கதியான 64 குடும்பங்கள் பூனாகலை தொழிற்சாலையில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்;பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வீடமைப்புத் திட்டத்தில் 64 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டபோதும், தற்போது 4 வீடுகளின் நிர்மாணப்பணிகளே நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஏனைய வீடுகள் ஆரம்ப கட்டத்திலே இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 'சீரற்ற காலநிலையே வீடமைப்பு பணிகள் தாமதமாவதற்கு காரணமாக உள்ளதாக' இவ்வீட்டுத்திட்டன் நிர்மாண பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரியொருவர் கூறினார்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் தளம் வெட்டுவதில்  சிக்கல் உள்ளது.

அத்தோடு,  மூலப்பொருட்கள் உரிய காலத்தில் எமக்கு கிடைக்கவில்லை. இவ்வாறான காரணங்களாலே நிர்மாணப்பணிகள்   மந்தக்கதியில் இடம்பெற்று வருகின்றன' என அவர் கூறினார்.

       

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .