2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மீரியபெத்த வீடமைப்புக்கு உயிரூட்டுவேன்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

மீரியபெத்தயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம்  முற்றுமுழுவதுமாக மந்தகதியிலே இருந்துவருகின்றது. இதனைத் துரிதப்படுத்தி வெகுவிரைவில் அம்மக்களுக்கான வீடுகளை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன் என்று ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் பொருட்டு அம்மக்கள் தங்கியிருக்கும் மாக்கந்தை தேயிலைத்தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றத்தினால் எம்மால் சமூக அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அக்காலம் இருள் சூழ்ந்த காலமாகவே கணிக்கப்பட்டுகின்றது. ஊவா மாகாண சபையிலும் இது போன்ற நிலையியே காணப்பட்டது.

அக்காலம் தற்போது இல்லாமல் போய்கொண்டு இருகின்றது. மத்திய அரசில் எமக்கு அரசியல் பலம் இல்லாமல் இருந்தால் கூட ஊவா மாகாண சபையில் எனது பொறுப்பில் இருக்கும் அமைச்சுக்களைப் பயன்படுத்தி, தடைப்பட்டிருந்த சமூக பணிகளையும் வீடமைப்பிலிருந்து வந்த மந்த கதியையும் நிவர்த்தி செய்ய முடியும்.

எனது முதற்பணி, மீரியபெத்தையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை துரிதமாக நிறைவு செய்வதாகும். வெகுவிரைவில் அவ்வீடுகளை எமது மக்களுக்கு கையளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன்.

ஊவா மாகாணத்தின் பாடசாலைகள் தோட்ட வைத்தியசாலைகள் ஆகியவற்றிக்கான பாதைகளை அமைக்கும் வேலைத்திட்டத்துக்கு  முன்னுரிமை வழங்கபடுவதைப் போன்று ஆகக்கூடிய முன்னுரிமையை மீரியபெத்தை வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்க கூடிய கவனம் எடுத்து வருகின்றேன் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .