Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
இந்த மாதம் 22ஆஅம் திகதி, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கம் விடுமுறை வழங்கியதால் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கூடுதலாக ரயில்கள் ஊடாக பயணிக்கும் யாத்திரிகர்கள், ஹட்டன் நகருக்கு வந்து, அங்கிருந்து இ.போ.ச பஸ்கள் மூலம் நல்லத்தண்ணிருக்கு வருகைத் தருகின்றனர்.
அதேபோல் சிரிய கார், வான், ஓட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மூலமும் அதிகளவான யாத்திரிகர்கள் வந்துச் செல்லும் நிலையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தனிப்பட்ட வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் தனிப்பட்ட வாகனப் பயன்பாடு குறைவடைந்துள்ளதுடன், பொது போக்குவரத்தையே யாத்திரிகர்கள் அதிகம் பயன்படுத்துவதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .