R.Maheshwary / 2022 ஜனவரி 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்ற ஒருவர்,திடீர் நோய்வாய்ப்பட்டு, இன்று(16) காலை உயிரிழந்துள்ளார் என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நாவலப்பிட்டி- தொரவாதெனியவைச் சேர்ந்த 72 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு தனியாக பயணம் மேற்கொண்டிருந்த இவர், இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .