2025 மே 05, திங்கட்கிழமை

யானையொன்றின் சேதத்தால் இளைஞர் பலி

Janu   / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டிற்குள் இளைஞர்கள் சிளர் உறங்கிக் கொண்டிருந்த போது காட்டு யானையொன்று சுவரை சேதப்படுத்தியதால் சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (29) பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அவிந்த இஷான் சமரநாயக்க எனவும் அவர்  சிகிரியா பிரதேசத்தில் விடுதி ஒன்றில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி பெறுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

நெல்லை  உண்ண வந்த காட்டு யானை ஒன்றே வீட்டின்  சுவரை சேதப்படுத்தியதால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளதுன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X