Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ந.மலர்வேந்தன்
கண்டி, ரத்தெனிகல பதுளை வீதியில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இரவு வேளைகளில் யானையின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, ரத்தெனிகல பதுளை வீதியில் புதன்கிழமை (225) இரவு 8.30 மணியளில், குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்களுக்கு குறுக்காக யானையொன்று வந்ததால், விபத்துக்குள்ளான இருவரும் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மக்கள், கடந்த காலங்களில், மாலை 6.00 மணிக்கு பின்னர் குறித்த வீதி வழியான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும், அண்மைக்காலமாக இவ்வீதி முழு நேர போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சிறிய ரக வாகனங்களில் பயணிப்பவர்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago