R.Maheshwary / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று(30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில், 6 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன், குறித்த வேன் அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த ஓட்டோவுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், ஓட்டோவில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago