Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
R.Maheshwary / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நானுஓயா- ரதெல்ல குறுக்கு வீதியில் 5 தொன்னுக்கு குறைவான நிறையுடன் வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் ஹட்டன்- நுவரெலியா சொகுசு பஸ்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான நிறைவேற்று பொறியியலாளரால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த வீதியில் கடந்த மாதம் 20ஆம் திகதிமாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று வான் மற்றும் ஓட்டோ ஒன்றுடன் மோதியதில் 7 பேர் மரணித்ததுடன் 53பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு நுவரெலியா மாவட்ட செயலாளரால் தடைவிதிக்கப்பட்டது.
எனினும் குறுக்கு வீதியைப் பயன்படுத்தாமல் மாற்று வீதியைப் பயன்படுத்துவதால் தாம் அதிக சிரமங்களுக்கு உள்ளாவதுடன் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்திருந்ததுடன்,
இந்த நிலையில் 5 தொன்னுக்கு குறைவான நிறையுடன் பயணிக்க வாகனங்களுக்கு இன்றிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கண்காணிக்க ரதெல்ல- கிரிமிட்டிய பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago