R.Maheshwary / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும்,
இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டிய போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.மக்களின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள்து . மக்களின் போராட்டம் நியாயமானது. மக்களை பாதுக்காக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளமையானது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. அரசாங்கம் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமையை மீள்கட்டியெலுப்ப கொடுக்கவில்லை என்பது அவர்களின் தற்போதைய செயல்களில் அறியமுடிகிறது.
நாட்டுமக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.தொ.கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களின் காட்டுமிராண்டித்க்கனமான செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
9 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Jan 2026