Editorial / 2022 டிசெம்பர் 08 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஷ
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற தபால் ரயில் நேற்று (7) இரவு நானுஓயா மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 124/½வது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்படைந்தது.
குறித்த ரயலின் பெட்டி ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும்,இன்று(8) காலை 8 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago