2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

ரிதிபானை ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் புனருத்தாபன வேலைகளுக்கு உதவி தேவை

எம். செல்வராஜா   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - ரிதிபானை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் புனருத்தாபன வேலைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் எனினும், பெருமளவு நிதிப்பற்றாக்குறை இருந்து வருவதாக, ஆலய பிரதம குருவான சிவஸ்ரீ ஆர்.பி. சாமிக் குருக்கள் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, புனரமைப்பு வேலைகள் இடம்பெற்ற நிலையில் இருந்து வருகின்றன என்றும் அடியார்கள் மனமுவந்து வழங்கிய நிதியின் மூலமாகவே, மேற்படி வேலைகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

தற்போது நிதிப் பற்றாக்குறையால், அபிவிருத்திப் பணிகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளன என்றும் இந்த கோவிலைப் பூரணத்துவப்படுத்த 6.5 மில்லியன்  ரூபாய் நிதி தேவைப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

ஆகவே, இவ் ஆலயத்தை முழுமையாகப் புனரமைத்துக்கொள்வதற்கு, தம்மால் இயன்ற வரையில் நிதி, சீமந்து, கற்கள், மணல், கம்பி போன்ற பொருள்களைத் தந்துதவுமாக, அவர்  கோரிக்கை விடுத்தார்.

கோவில் புனருத்தாபனத்துக்கு உதவி செய்வோர், 072-8578072 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வினவுமாறும் ஆலய புனருத்தாபன வேலைகளைப் பார்வையிட, பதுளை-ரிதிபான பகுதிக்கு வருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .