2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ரூ, 20 இலட்சம் செலவில் ஆயுர்வேத வைத்தியசாலை

Freelancer   / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் 

பொகவந்தலாவை,நோர்வூட், மஸ்கெலியா வாழ் மக்கள் ஆயுர்வேத வைத்திய தேவைகளுக்காக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டிய நகரங்களுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அமைவாக நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நகரில் முதற்கட்டமாக ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

அதற்கான வைத்தியர் ஒருவரையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். அதனூடாக தற்போது மக்கள் இலவசமாக வைத்திய சேவைகளை பெற்று பயனடைகின்றனர் என்று நோர்வூட் பிர​தேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார். 

 நோர்வூட் பிரதேச சபையின் கீழ் எனது ஆலோசனைக்கமைய, 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொகவந்தலாவ நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை செவ்வாய்க்கிழமை (27)    திறந்து வைக்கப்பட்டது.

இதனூடாக பொகவந்தலாவ பிரதேசத்துக்கு உட்பட்ட 35 பிரிவுகளில் உள்ள மக்கள் இலவசமாக ஆயுர்வேத வைத்திய சேவையினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .