Sudharshini / 2016 ஜனவரி 28 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மலையக பெருந்தோட்ட வரலாற்றில் முதன்முறையாக அக்கரப்பத்தனை, பெங்கட்டன், சின்ன தோட்டத்தில் 80 கோடி ரூபாய் செலவில் 160 வீடுகளை கொண்ட புதிய கிராமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சனிக்கிழமை (30) இடம்பெறவுள்ளது.
புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் டயகம பிரதேச பிரதான அமைப்பாளர் சுப்பிரமணியம் விஜயகுமாரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும தொழில் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்;ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா, சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago