2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

லஞ்ச் ஷீட்​டை சாப்பிட வைத்த அதிபர்: இருவர் பாதிப்பு

Editorial   / 2023 நவம்பர் 22 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம்,   நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும்   கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

பாதிப்பு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் கல்லூரியில் 11-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்   மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாளில் சுற்றிக்கொண்டு வந்துள்ளனர்.   

அந்த வகுப்பில் 33 மாணவர்கள்  கல்வி பயின்று வருகின்றனர். இதில் 07 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு லஞ்ச் ஷீட் மற்றும் செய்தித்தாள் பக்கங்களை ஏழு மாணவர்களும் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.   

 அப்போது ​​அவ்விடத்திற்கு வந்த அதிபர் அவற்றை வெளியே எடுத்து,  சாப்பிடுமாறு கூறியுள்ளார்.  அவர்கள் அனைவரும் லஞ்ச் ஷீட் மற்றும் பத்திரிக்கைகளை தின்றுவிட்டனர்.

லஞ்ச் ஷீட்டில் மற்றும் செய்தித்தாள்களை சாப்பிட்ட ஏழு மாணவர்களில் ஒருவர் 21 ஆம் திகதியும் மற்றுமொரு மாணவன் 22 ஆம் திகதியும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தந்தை, நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அந்தப் பாடசாலையின் அதிபரை  தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அம்முயற்சி கைகூடவில்லை.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X