Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 16 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன், ஆ.ரமேஸ், ரஞ்சித் ராஜபக்ஸ
தலவாக்கலை- மிடில்டன் (பெரிய மல்லியப்பு) தோட்ட லயக்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயால் 7 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.
பெரிய மல்லியப்பு தோட்ட இலக்கம் (03) லயன் தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (15) 8.20 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 12 குடும்பங்களை சேர்ந்த 49 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுள் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் , பிரதேசவாசிகள்,தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் மலையக எழுத்தாளர்களான மல்லிகை சிவகுமார் மற்றும் கவிஞர் சேழியன் ஆகியோரது வீடுகளும் எரிந்துள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட போது தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் அதிகமானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
13 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago