2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

லயக்குடியிருப்பில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

R.Maheshwary   / 2022 ஜூன் 22 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

டிக்கோயா தோட்டத்தின் தரவளை கீழ்ப்பிரிவிலுள்ள லயக்குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீயால் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

அத்துடன் தீ ஏனைய வீடுகளுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டள்ளது.

12 வீடுகளைக் கொண்ட குறித்த லயக்குடியிருப்பில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, ஏனைய வீடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், அயல்வாசிகளால், ஹட்டன் பொலிஸார், ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து  தீயை அணைத்ததாக  ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீயால் பகுதியளவில் சேதமடைந்த 4 வீடுகளைச் சேர்ந்த 20 பேரை வேறொரு இடத்தில் தங்க வைக்க, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X