Editorial / 2024 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்,பி.கேதீஸ்,
தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணித்த பேருந்து சாரதி உட்பட ஐவர் காயமடைந்து லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வௌ்ளிக்கிழமை (02) காலை 8 மணியளவில் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை மட்டுக்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, கொழும்பில் இருந்து அம்பேவெல அரச கால்நடை பண்ணைக்கு சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் தனியார் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பெய்து வரும் மழையினால் வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதால், ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாகவும், மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு லிந்துல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago