2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

வகுப்பறைக்கு தீ வைப்பு; அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

R.Maheshwary   / 2022 ஜூன் 09 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட்- சென்-ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை ஒன்றுக்கு இனந்தெரியாதோர் தீ வைத்த சம்பவம் தொடர்பில், இந்த மாதம் 6ஆம் திகதியே ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பணிமனையின் பணிப்பாளர் ஆர். சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.

மே மாதம்  27ஆம் திகதி  தீ வைக்கப்பட்டதாக பாடசாலை அதிபரால் ஹட்டன் வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை குறித்த பாடசாலையின்  ஆசிரியர்களால் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, இது தொடர்பில் பணிப்பாளரை நாம் தொடர்பு கொண்டு வினவிய போது மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவம் இடம்பெற்ற அன்றே,  அதிபர் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருக்க வேண்டும். இது தொடர்பில்  கோட்டக் கல்வி பணிப்பாளர் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு, வலய கல்வி பணிமனைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X