R.Maheshwary / 2022 ஜூன் 06 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்,ரஞ்சித் ராஜபக்ஷ
க.பொ.தராதர சாதாரணதர பரீட்சைக்காக மூடப்பட்ட சகல அரசாங்க பாடசாலைகளினதும் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நேற்று( 6) ஆரம்பமான நிலையில், ஹட்டன் கல்விவலையத்துக்கு உட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் நேற்று (6) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மே மாதம் 26ஆம் திகதி இரவு குறித்த பாடசாலையின் 11ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த சிலர், மதுபானம் அருந்திவிட்டு வகுப்பறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், பாடசாலை அதிபர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, ஆசிரியர்களால் இந்த பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்ட அந்த அலுமாரியில் இருந்த மாணவர்களின் தனிப்பட்ட தரவுகள் பல அழிவடைந்துள்ளதுடன் பாடசாலையின் யன்னல் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் பணிபகிஷ்கரிப்பை அடுத்து, நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, அதிபர் மற்றும் ஆசியர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் குறித்த பாடசாலை அதிபரால் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நோர்வூட் பொலிஸார், வகுப்பறைக்குத் தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் ஆர்.சத்தியேந்திராவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.



.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago