2025 மே 05, திங்கட்கிழமை

வடிவேலை நீக்கினார் சஜித்

Editorial   / 2023 நவம்பர் 28 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2024 வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் அடிப்படையி​லேயே வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய்  பெற்றுக்கொண்டார்.

“நான் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பசறையில் உள்ள இளைஞர்களுக்காக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் அரசியலில் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள்,'' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X