2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வட்டகொடை தெப்பகுளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 ஜனவரி 02 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

 தலவாக்கலை- வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள, தெப்பக்குளத்திலிருந்து, பெண்ணொருவரின் சடலம் இன்று (2) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்,  வட்டகொடை- மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தெப்பக்குளத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண்,  தற்கொலை செய்து கொண்டாரா?, தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில், தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின், சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X