Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹொமட் ஆஸிக்
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வாழைசெய்கைக்கு ஒரு வகை வண்ணத்துப்பூச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எஸ்.வெலிகமகே தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'லெபிடொப்டெரா ஹெஸ்பரிடே' என்ற வர்க்கத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகளே, இவ்வாறு வாழை மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறன.
இவ்வண்ணத்துப்பூச்சியினங்கள் வாழை இலைகளின் பின்புரத்தில் சுமார் 20 - 30 முட்டைகளை இடும். இதனால் வாழை இலைகள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடும். மேலும், வாழை மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நோய்தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளை வெட்டி அழிப்பது மற்றும் தீ வைத்தல் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.
இது குறித்த மேலதிக விவரங்களை பேராதனையிலுள்ள விவசாய திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 0812 388 316 என்ற தொலைபேசி மூலமும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
34 minute ago
1 hours ago