2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

“வந்துவிட்டோம் வர முடியவில்லை”

Editorial   / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத் எச்.எம்.ஹேவா

தீபாவளி கொண்டாட்டத்துக்காக கொழும்பு உள்ளிட்ட பெரும் நகரங்களில் இருந்து பெருந்தோட்டங்கள் உள்ளிட்ட பிரதேசங்களில் வந்திருந்த பெருந்திரளானவர்கள், தொழில் செய்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் பல்வேறான ​அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஹட்டன் பஸ் நிலையத்துக்கு இன்று 26) காலையிலேயே பெரும் திரளானவர்கள் வந்துவிட்டனர். எனினும், போதியளவில் பஸ்கள் இன்மையால் நீண்ட நேரமாக, காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடுமையான மழைக்கு மத்தியில் நீண்ட நேரமாக கால்கடுக்க வரிசையில் நின்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் காத்திருந்த பயணிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் கேட்டபோது பதிலளித்த, இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போ உதவி முகாமையாளர் (போக்குவரத்து) சமன் ரத்னாயக்க,

“பல நாட்களுக்கு முன்னராக கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து ஹட்டன் பிரதேசங்களுக்கு வருகைதந்திருந்தவர்கள், ஹட்டனில் இருந்து இன்று (26 ) திரும்புவதற்கு முயற்சி செய்தனர். அதனால் இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமை ஏற்பட்டது . எனினும், ஹட்டன் பஸ் நிலையத்துக்கு பயணங்களை மேற்கொள்வதற்காக வந்திருக்கும் சகலருக்கும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X