2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு சலுகைகள் இல்லை

Sudharshini   / 2015 நவம்பர் 29 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்து விராஜ் அபயசிறி

2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு எவ்வித  சலுகையும் வழங்கப்படவில்லையென, புதிய தாராளவாத மாக்சிச லெனினிஸ கட்சியின் செயலாளர் சி.கே.செந்தில்வேல் தெரிவித்தார்.

மாத்தளை, செடில்கோ ஹோட்டலில் சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், '2016 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தினால் மலையக மக்களுக்கு எவ்வித நலனும் இல்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய 1,000 ரூபாய் சம்பளம் தொடர்பிலும் அதில் பேசப்படவில்லை. 

 '5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2,000 மக்களுக்கு வீடு  வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் 1 இலட்சத்து 85 ஆயிரம் மலையக மக்களுக்கு வீட்டுகளுக்கான தேவை நிலவி வருகின்றது' என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

மேலும் அவர், 'தொண்டராசிரியர்கள் 3 ஆயிரம் பேர், நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு  6 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இம்முறை வரவு - செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .