Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பெரும் சிரமங்களுக்கு முகக்கொடுக்கும் மக்களிடம் அறவிடப்படும் வரிகளை குறைத்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நுவரெலியா மாநகர சபையின்உறுப்பினர் எஸ். சிவரஞ்சனி கேட்டுக்கொண்டார்.
நுவரெலியா மாநகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேச மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (20) காலை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருட்களின் விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு வாழ்க்கை சுமை என மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் தோட்டத் தொழிலாளர்கள், கூலிவேலை செய்வோர் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு கிடைக்கும் நாள் வருமானத்தை வைத்து அந்த நாளின் வாழ்க்கையை கொண்டு செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். தொழில் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் தினம் பாதிக்கப்பட்டு வரும் நுவரெலியா மாநகர சபை மக்களிடமிருந்து அறவிடப்படும் வரி மற்றும் நீர் கட்டணங்கள் அதிகமாகும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு அறவிடப்படுகின்ற வரி மற்றும்,நீர் கட்டணத்தின் ஊடாக கிடைக்கும் பணத்தினை மாநகர அபிவிருத்தியென மண்ணில் இடாது, பொருளாதார நெருக்கடியான இக்காலக்கட்டத்தை உணர்ந்து வரி மற்றும் நீர் கட்டணங்களை குறைத்து மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க திட்டங்களை கொண்டு வருவது சிறந்ததாகும் என்றார்.
9 minute ago
9 minute ago
21 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 minute ago
21 minute ago
35 minute ago