Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கேதீஸ்
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தலவாக்கலை ரத்தனிக்கல, தெவிசிறிபுற, குமாரகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது வரி பணத்தைச் செலுத்துவதில், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் பி.ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று முன்தினம் (11) நடைபெற்றது. இந்த அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கூறிய அவர்,
தலவாக்கலை நகர சபையின் கீழ் இயங்கிவந்த ரத்தனிக்கல, தெவிசிறிபுற, குமாரகம ஆகிய கிராமங்கள், உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணயத்தின் போது, கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குள் உள்வாங்கப்பட்டன எனச் சுட்டிக்காட்டியதோடு, இதனால், பல வருடங்களாக, தங்களது வரிப் பணத்தை, தலவாக்கலை நகர சபையில் செலுத்தி வந்த கிராம மக்கள், தற்போது நீண்ட தொலைவில் அமைந்துள்ள கொட்டகலை பிரதேச சபைக்குச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
வரி பணம் செலுத்துவதற்காக மேற்படி கிராமங்களிலிருந்து, கொட்டகலை பிரதேச சபைக்கு வரும் மக்கள், வரி பணத்தை செலுத்த முடியாது திருப்பி அனுப்பப்படுவதாகத் தன்னிடம் முறையிட்டுள்ளனர் என்றும் அவர், சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
எனவே, மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது வரி பணத்தை, எவ்வித இடையூறுமின்றி செலுத்துவதற்கான வழிவகைகளை, கொட்டகலை பிரதேச சபை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .