2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வர்த்தகருக்கு தங்க மனசு

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிமலை நகரின் பிரதான வீதியில் கிடந்த அரை பவுண் மதிப்புள்ள மோதிரத்தை கண்டெடுத்த வர்த்தகர், உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.

சனிக்கிழமை (08) கண்டெடுத்த மோதிரத்தை வர்த்தகரான ஷாமிந்த ஒமதுவவிதான (வயது 51), அதே நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும், கே.எஸ் ராஜூபாலனுடைய மனைவியின் மோதிரத்தையே கண்டெடுத்து ஒப்படைத்துள்ளார்.

சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை கண்டெடுத்த வர்த்தகர், அதுதொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பின்னர் ​திங்கட்கிழமை (10) உரியவரிடம் கையளித்துள்ளார்.

                                                                                                                                                              செ.தி பெருமாள்

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X