2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வலப்பனை விபத்தில் மேலும் இருவர் மரணம்

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஸ், எஸ்.கணேஸன்

 

வலப்பனை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது.

வலப்பனை, மஹாஊவா, ஹரிஸ்பத்துவ, பெரியமுடக்கு பகுதியில், நேற்று (24) இரவு 7 மணியளவில், தனியார் பஸ் ஒன்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 53 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்பாறையில் இருந்து, நுவரெலியாவுக்குச் சுற்றுலாச் சென்ற தனியார் பஸ் ஒன்றே, இவ்வாறு விபத்துக்குள்ளானதாக, வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ்ஸில் 54 பேர் பயணித்ததாகவும், இவர்கள் அம்பாறை – கோணாகொல்ல பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் இன்று (25) மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

இவர்கள், நுவரெலியாவுக்குச் சென்று, வலப்பனை வீதி வழியாக அம்பாறைக்கு திரும்பிச்சென்ற போதே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .