2025 மே 15, வியாழக்கிழமை

வலம்புரி சங்கை விற்க முயன்ற இருவருக்கு விளக்கமறியலில்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத்.எச்.எம்.ஹேவா

வலம்புரி சங்கு ஒன்றை 6 கோடி ​ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போது, கைதுசெய்யப்பட்ட நபர்களை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் மொஹமட் பரீடீன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த மாதம் 21ஆம் திகதி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வலம்புரி சங்கொன்று 6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதென இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட படையினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்கள் ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஹட்டனைச் சேர்ந்த 36 வயதான ஒருவரும் உடபுஸ்ஸலாவை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .