R.Maheshwary / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பொகவந்தலாவ – செப்பல்ட்டன் தோட்டத்தின் மேற்பிரிவில், வலைக்குள் சிக்கியிருந்த சிறுத்தையொன்று 8 மணி நேரம் போராட்டத்தின் பின்னர், மயக்க ஊசி செலுத்தப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று அடி நீளமான ஆண் குறித்த சிறுத்தை வலையில் சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட மக்கள், நேற்று (12 ) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் அதிகாரி பொகவந்தலாவ பொலிஸாருக்கு தெரியப்படுத்தியப் பின்னர், பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.
மரக்கறி தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே சிறுத்தை சிக்கியுள்ளதுடன், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் வலையை பிய்த்துக்கொண்டு ஓடியதால் தேயிலை மலைப்பகுதியில் சிக்கியுள்ளது.
இதன் பின்னர், ரந்தெனிகல மிருகவைத்தியசாலையிலிருந்து, மிருக வைத்திய அதிகாரியொருவரும் வரழைக்கப்பட்டு, துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டு, சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப கொண்டு செல்லப்பட்டதுடன், குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


1 hours ago
3 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
17 Jan 2026