2025 மே 16, வெள்ளிக்கிழமை

வழிவிட்ட லொறி பள்ளத்தில் விழுந்தது

R.Maheshwary   / 2023 ஜனவரி 23 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மோட்டார் சைக்கி​ளொன்றுக்கு வழியை விடுவதற்காக ஒதுங்கிய லொறியொன்று ஆற்றில் விழுந்த சம்பவம் ஒன்று, நேற்று (22) கொட்டகலையில் பதிவாகியுள்ளது.

இதன்போது லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என திம்புளபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22) மாலை 4 மணியளவில் கொட்டகலை- யதன்சைட் தோட்டத்துக்கு செல்லும் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யதன்சைட் தோட்டத்திலிருந்து கொட்டகலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்த லொறியானது, எதிர்திசையில் வந்துக்கொண்டிருந்த ​மோட்டார் சைக்கிளுக்கு பாலத்தின் மத்தியில் இடமளிக்க முற்பட்ட போது பாலத்தின் கீழே​ 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

லொறியில் மேழும் இருவர் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என  பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .