2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பில்தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம்

R.Maheshwary   / 2022 மார்ச் 23 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பில் கேகாலை மாவட்ட சிவில் அமைப்புகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று,  இன்று(23) கேகாலையில் நடைபெறவுள்ளது.

கேகாலை- ரந்தெனியவில் உள்ள சர்வதோய மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது என, சர்வோதய அமைப்பின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பியதிலக தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டமானது, இன்று காலை 9 மணியிலிருந்து பகல் 1.30 மணிவரை நடைபெறவுள்ளதுடன், இதில் பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த 50 பேரைக் கொண்ட குழுவினர் பங்கு பற்றுவர் என்றார்.

இவர்களுக்கான தெளிவுப்படுத்தல் நடவடிக்கைக்காக கேகாலை உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் கஸ்தூரிசிங்க , பெப்ரல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ கயனாத் உள்ளிட்டவர்கள் முன்னெடுக்கவுள்ளதுடன், பெப்ரல் அமைப்பு இந்த நிகழ்வுக்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X