Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, சந்ரு
மலையகத்தின் பல இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (25)அதிகாலை தொடக்கம் கடும் மழையுடனான வானிலை நிலவியது.
இதனால் மலையகம் முழுவதும் இருளான சூழல் நிலவுவதுடன், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி மற்றும் ஏனைய வீதிகள் மழையினால் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.
மேலும் நுவரெலியா - ஹற்றன் ,நுவரெலியா - கண்டி , நுவரெலியா -வெளிமடை போன்ற பிரதான வீதிகளிலும் ரதல்ல, நானுஓயா , டெஸ்போட் ,கந்தப்பளை ஆகிய பகுதிகள் எங்கும் கடுமையான பனி மூட்டம் காணப்படுவதால் சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன், நுவரெலியாவிலிருந்து- தலவாக்கலை செல்லும் பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளது. மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விடிந்தும் இரவு வேளையைப் போல இருளாகவே காட்சியளித்து. இதனால், நத்தார் பண்டிகையும் களைக்கட்டவில்லை. அத்துடன், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago