Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் திங்கட்கிழமை (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
உயிரிழந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் தங்குமிடத்திற்கு வந்தாகவும் திங்கட்கிழமை (22) காலை அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்
எனினும் திங்கட்கிழமை (22) காலை வரை வெளியே வராத காரணத்தால் சந்தேகம் ஏற்பட்ட ஊழியர் ஒருவர் அறையில் ஜன்னல் வழியாக பார்த்த போது குறித்த நபர் தரையில் விழுந்து கிடப்பதைப் கண்டு நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதற்கமைய சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் குறித்த நபர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்நுளைந்து பார்த்த போது அவர் கீழே விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் பொலிஸாரால் 1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்தவர்கள் பரிசோதனை செய்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
செ.திவாகரன்

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago