Freelancer / 2023 மார்ச் 02 , மு.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்குவளை "பிராந்திய கல்வி அபிவிருத்திச் சங்கத்தின்” ஏற்பாட்டில் பிரதேசத்தில் அமைந்த தமிழ்மொழிமூல பாடசாலைகளில் தரம் 11இல் கல்விகற்கும் மாணவர் மாணவிகளுக்கு இடையிலான வினா- விடை போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன. இதற்கான அறிவித்தல்கள் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உக்குவளை அஜ்மீர், குரீவெல ஹமீதியா , வரக்காமுர அந்நூர், ரத்வத்த தமிழ், உள்பத்பிட்டிய முஸ்தபா ஆகிய பாடசாலைகளின் மாணவர் மாணவிகள் இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளனர்.
போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் வெற்றிபெறும் மாணவர் மாணவியர்களுக்கு நிகழ்வின் இறுதியில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என அந்த அமைப்பின் ஸதாகத் தலைவர் முன்னாள் அதிபர் எம். நிஸ்பர் தெரிவித்தார்
15 minute ago
33 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
5 hours ago