2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென் ஜோன்ஸ் தோட்டத்தில் நேற்று (20) இரவு  இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த 28 வயதான விஜயரட்னம் ஜீவரட்னம் என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நண்பர் ஒருவருடன் நுவரெலியா- இராகலை பிரதான வீதியின் சென்ஜோன்ஸ் தோட்டத்துக்கருகில் நடந்து சென்ற இவர்கள் மீது, ஓட்டோவொன்று வேகமாக மோதி தப்பிச் சென்றதாக, இராகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர், சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X