Kogilavani / 2017 ஜூலை 02 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா - கொழும்பு பிரதான வீதி, லபுக்கலை கொண்டகலை பகுதியில், சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில காயமடைந்த ஏழுபேரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து குருநாகலை நோக்கிச் சென்ற வானும் கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற காரும் கொண்டக்கலை பகுதியில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இரு வாகனங்களிலும் பயணித்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago