2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் பலி

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

பூண்டுலோயா- கம்பளை வீதியில் பாலுவத்த சந்தியில் இன்று (24) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன்  மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

 பூண்டுலோயா- வெவஹேன பகுதியைச் சேர்ந்த ஆர். ஜி. அனுஷா குமாரி வயது (55) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X