2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விறகு தேடச்சென்ற பெண் சடலமாக மீட்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியான கொலப்பத்தனை தோட்ட பகுதியிலிருந்து, இன்று (29) நண்பகல், பெண்ணின் சடலமொன்றை மீட்டுள்ளதாக, நாவலப்பிட்டி மற்றும் பத்தனை பொலிஸார் தெரிவித்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் குயின்ஸ்பெரி தோட்டத்தில் வசிப்பதாகவும், காத்தான் கறுப்பாயி வயது 58 என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இன்று காலை, வீட்டுக்கு விறகு தேடுவதற்காக சென்ற இப்பெண், நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியின் ஓரத்தில் உள்ள தேயிலை நடப்பட்ட இடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்ட பிரதேசவாசிகள், நாவலப்பிட்டி மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த இரு பிரிவு பொலிஸாரும் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .