Ilango Bharathy / 2021 ஜூன் 16 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கேள்விக்குறியாகவே காணப்படுவதாகவும், இந்த ஆயிரம் தொடர்பான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் கிடப்பில் இருக்கும் நிலையில், தோட்ட கம்பனிகள் தொழில் ரீதியான கெடுபிடிகளை தொடர்ச்சியாக தொழிலாளர்களிடம் திணித்து வருவதாக கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.மோகன்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,எனவே எரிபொருள் விலையேற்றத்துடனான அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், நாட்டு மக்கள் மேலும் கஸ்டப்படும் நிலைக்கு செல்ல வேண்டியுள்ளதென்றார்.
எரிபொருள் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலையும் எதிர்வரும் நாள்களில் அதிகரிக்கும் என்பதுடன், இவ்வாறான கட்டுப்பாடற்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் துணைப் போவதை தமது சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
9 minute ago
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
3 hours ago
4 hours ago