R.Maheshwary / 2022 ஜனவரி 16 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
மலையகத்தில் நிலவும் கடும் வெயிலுடனான வானிலையுடன் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, வட்டவளை, குயில்வத்த மற்றும் ரொசல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பகுதிகள் கடந்த சில நாள்களாக அதிகம் தீப்பற்றலுக்கு உள்ளாகி வருகின்றன.
இதனால் பாரிய சுற்றாடல் அழிவுடன், ஊற்று நீர் வற்றி குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமையும் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசங்களிலுள்ள காடுகளில் வாழும் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவே இவ்வாறு காடுகள் விஷமிகளால் தீவைக்கப்படுவதாகவும், எனவே இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .